ஒருவரையொருவர் கனம் பண்ணுங்கள்!!
by Shalom HQ
சிந்தனையில் கனம் பண்ணுங்கள்:
- “என்னுடைய கணவர் தேவ சாயலில் படைக்கப்பட்டவர்” என்பதை மனைவிமார்களும், அது போலவே “என் மனைவியும் தேவ சாயலில் உருவாக்கப் பட்டவர்” என்பதை கணவன்மார்களும் மனதில் நிலைப்படுத்திக்கொள்ள வேண்டும்.. ஆகவே மனதளவில் இப்படி நினைப்பதும் கனம் பண்ணுவதாகும்.
சொல் அளவில் கனம் பண்ணுதல்:
- ஒருவருக்கொருவர் நல் யோசனைகளை மனம் விட்டுப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.. உங்கள் கணவரையோ, அல்லது மனைவியையோ அல்லது அவர்கள் குடும்பத்தினரையோ எக்காரணத்தைக் கொண்டும் குறை சொல்லக் கூடாது.. மாறாக, உயர்வாகத் தான் பேச வேண்டும்.. இது ஓர் உன்னத கனப்படுத்துதல் ஆகும்.
- ஒரு போதும் கெட்ட வார்த்தைகள் உங்கள் வாயில் வரக்கூடாது.. கட்டி எழுப்பும் உயர்வான வார்த்தைகளையே பயன் படுத்துங்கள்.. அன்பான செல்லப் பெயர்களை வைத்து ஒருவரையொருவர் கூப்பிடுவது அவர்களை அதிகம் பெலனூட்டும்.
- குறைபாடுகளை ஒருபோதும் மனதளவில் கூட எண்ணக் கூடாது. அந்தக் குறைபாடுகளின் மத்தியில் நிறைவுகளைக் காணும் கண்களை நமக்கு தேவன் தர வேண்டும்.. இதற்காகவும் ஜெபியுங்கள்.
செயலளவில் கனம் பண்ணுதல்:
- வீட்டின் வேளைகளைச் செய்வதும், குடும்பப் பொறுப்புகளைப் பகிர்ந்து செயல் படுவதும் கனம் பண்ணுதலே.
- எதனையும் ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக பகிர்ந்து கொள்வதும் கனம் பண்ணுதலின் மற்றொரு பங்கே.
- பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் உடன் பணியாற்றுவோர் முன்நிலையில் தங்களின் துணைவரைக் குறித்து எப்போதும் உயர்வாகவே பேச வேண்டும்.
- தங்கள் மனைவி கூறும் ஆலோசனைகளை கணவரும், கணவர் கூறும் ஆலோசனைகளை மனைவியும் ஏற்றுக்கொள்வதே மிகச் சிறந்த கனப்படுத்துதலாகும்.
“எல்லாரையும் கனம் பண்ணுங்கள். சகோதரரிடத்தில் அன்பு கூறுங்கள். தேவனுக்குப் பயந்திருங்கள். ராஜாவை கனம் பண்ணுங்கள்” (1 பேதுரு 2:17)
Mr. Brighton MBA
& Mrs. Priscilla Brighton M.Sc., M.Phil
Recommended Posts
‘பிந்தின மகிமை…!’
September 05, 2024
ஏன் இப்படிப் பயப்பட்டீர்கள்? – மாற்கு 4: 35 – 40
May 03, 2020
கடன் இல்லாமல் வாழ..!
July 21, 2018