கடன் இல்லாமல் வாழ..!

  1. கடவுளிடம் மன்றாடுங்கள்.. காலை தோறும், துணைவரோடு கை கோர்த்து, கட்டாயம் கதறுங்கள்.
  2. கடன் வாங்கக் கூடாதென்பதில் இருவருக்கும் வைராக்கியம் அவசியம்.. ஏற்கனவே கடன் வாங்கியிருந்தால் அடைப்பதற்கான ஆக்கப்பூர்வ வழிகளைத் திட்டமிட வேண்டும்.
  3. பயன்படாத நிலமோ, நகையையோ வைத்துக் கொண்டு கடனில் தத்தளிப்பதைவிட அதனை விற்று கடனை அடைத்து சுதந்திரமான புது வாழ்க்கை வாழ்வது நலம்.
  4. உங்கள் வருமானத்தில் இருபது சதவீதம் சேமிப்பாய் இருக்கட்டும்.. தொடர் வைப்பு (R.D.) இன்சூரன்சு (LIC) போன்றவற்றில் மாத்திரம் சேமியுங்கள்.
  5. உண்டியல் மூலமாக எஞ்சும் நாணயங்களையும், ரூபாய் தாள்களையும் சேமிக்கலாம்.. சிறு துளி பெருவெள்ளம்.. மறந்து விடாதிருங்கள்.
  6. சீட்டுக் கம்பெனியோ, சீட்டுக்கார அண்ணாச்சியோ, அக்காவோ யாரையும் நம்ப வேண்டாம்.. சீட்டு திடீரெனத் தீண்டும் பாம்பு.
  7. எல்லா வரவையும் எழுதுங்கள்.. எல்லாச் செலவையும் திட்டமிடுங்கள்..
  8. திட்டமிடாச் செலவும், லிஸ்டிலில்லா சூப்பர் மார்கெட் பார்சேஸூம் ஒன்றுதான்.. பில் பருத்துவிடும்.. உயயோகமோ அவ்வளவாய் இருக்காது.
  9. தவணை முறைக் கடன் கையைக் கடிக்காமல் இருக்கலாம்.. ஆனால் பட்ஜெட்டில் இருக்கும் மாதக் கடனில் மளிகைச் சாமான்கள் வாங்கவே கூடாது.
  10. ஆடம்பர, அநாவசிய செலவுகளை அறவே தவிர்த்திடுங்கள்.. பகட்டு, பந்தா ஒரு நாளும் நல்லதல்ல.. எளிமையே எல்லையில்லா இனிமை தரும்.
  11. வருமானத்தின் முதல் செலவு கர்த்தருக்குக் கொடுக்கும் தசமபாகமாய் இருக்கட்டும்.. கர்த்தர் ஒரு நாளும் கடன்காரர் அல்ல.. இரண்டாவது செலவு, வாடகை செலுத்துவதாக இருக்கட்டும்.

“எப்படி வேண்டுமானாலும் வாழலாம்” என்பதல்ல வாழ்க்க.. இப்படித்தான் என இலக்கு வகுத்து இங்கிதமாய் வாழ்வதே நல்ல வாழ்க்கை.. சிக்கனமாய் செலவு செய்வோம்.. சிறப்புடனே வாழ்ந்திடுவோம்!

சிந்திப்போம்! சாதிப்போம்!!

ஞா. ஜெசுகரன் தங்கராஜ், பி.காம், டிபிசிஸ்., எம்.ஏ, எம்.டிவ்.

மேலாளர், திட்டங்கள், அருணோதயா வட்டார வளர்ச்சித் திட்டம், ஷாத்நகர், தெலுங்கானா மாநிலம்.

share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *