21
Jul 2018
கடவுளிடம் மன்றாடுங்கள்.. காலை தோறும், துணைவரோடு கை கோர்த்து, கட்டாயம் கதறுங்கள். கடன் வாங்கக் கூடாதென்பதில் இருவருக்கும் வைராக்கியம் அவசியம்.. ஏற்கனவே கடன் வாங்கியிருந்தால் அடைப்பதற்கான ஆக்கப்பூர்வ வழிகளைத் திட்டமிட வேண்டும். பயன்படாத நிலமோ, நகையையோ வைத்துக் கொண்டு கடனில் தத்தளிப்பதைவிட அதனை விற்று கடனை அடைத்து சுதந்திரமான புது வாழ்க்கை வாழ்வது நலம். உங்கள் வருமானத்தில் இருபது சதவீதம் சேமிப்பாய் இருக்கட்டும்.. தொடர் வைப்பு (R.D.) இன்சூரன்சு (LIC) போன்றவற்றில் மாத்திரம் சேமியுங்கள். உண்டியல் மூலமாக எஞ்சும் நாணயங்களையும், ரூபாய் தாள்களையும் சேமிக்கலாம்.. சிறு துளி பெருவெள்ளம்.. மறந்து விடாதிருங்கள். சீட்டுக் கம்பெனியோ, சீட்டுக்கார அண்ணாச்சியோ, அக்காவோ யாரையும் நம்ப வேண்டாம்.. சீட்டு திடீரெனத் தீண்டும் பாம்பு. எல்லா வரவையும் எழுதுங்கள்.. எல்லாச் செலவையும் திட்டமிடுங்கள்.. திட்டமிடாச் செலவும், லிஸ்டிலில்லா சூப்பர் மார்கெட் பார்சேஸூம் ஒன்றுதான்.. பில் பருத்துவிடும்........
Read More
21
Jul 2018
“யாபேஸ் தன் சகோதரைப் பார்க்கிலும் கனம் பெற்றவனாயிருந்தான். அவன் தாய்; நான் துக்கத்தோடே அவனைப் பெற்றேன் என்று சொல்லி அவனுக்கு யாபேஸ் என்று பேரிட்டாள்” (1 நாளாகமம் 4:9) “யாபேஸ் இஸ்ரவேலின் தேவனை நோக்கி, தேவரீர் என்னை ஆசீர்வதித்து, என் எல்லையைப் பெரிதாக்கி, உமது கரம் என்னோடிருந்து, தீங்கு என்னைத் துக்கப்படுத்தாதபடிக்கு அதற்கு என்னை விலக்கிக் காத்தருளும் என்று வேண்டிக்கொண்டான்; அவன் வேண்டிக் கொண்டதை தேவன் அருளினார்.” (1 நாளாகமம் 4:10) இந்த ஜெபம் நம் வேத புத்தகத்தில் ஒரு விசேஷித்த ஜெபம்.. மேலோட்டமாகப் பார்த்தால், வேதத்திலேயே மிகச்சிறிய ஜெபம்! மற்றும் ஒரே வசனத்தில், “என்னை” என்ற வார்த்தை மூன்று முறையும், “என்” என்ற வார்த்தை ஒரு முறையும் சொல்லப்பட்டு ஒரு சுயநல ஜெபமாகக் காணப்படுகின்றது.. ஆனால் இது வேத புத்தகத்தில் ஆவியானவர் எழுதி வைத்திருப்பதால், இந்த ஜெபத்தைக் குறித்து......
Read More