03
May 2020

ஏசாயா 41:10 “நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.” கிறிஸ்துவுக்குள் அன்பார்ந்த தேவ ஜனமே, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையும் சமாதானமும் உங்களோடு இருப்பதாக. கர்த்தர் இம்மாதம் முழுவதும் உங்களோடிருந்து உங்களுக்குச் சகாயம்பண்ணி, தமது வலது கரத்தினாலே தங்களைத் தாங்குவாராக! மேற்கண்ட பகுதி நமக்கு நன்கு தெரிந்த பகுதி– இயேசு காற்றையும் கடலையையும் அதட்டினார். நடந்தது என்ன? இயேசுவும் சீஷர்களும் பிரயாணம் செய்த படகில், சுழல் காற்றினால் உண்டான அலைகள் மோத, சீஷர்கள் பயந்தனர். இப்படிப்பட்ட சுழல் காற்று அவர்களுக்கு புதிதல்ல. மலைகள் சுற்றியுள்ள பகுதியாகையால், அடிக்கடி சுழல் காற்று உண்டாவது வழக்கம். அப்போது 40 அடி உயர அலைகள் உண்டாகுமாம். ஆனால் வசனம் சொல்கிறது, ‘அவர்கள் அவரை......
Read More