General Secretary’s Desk
மூலைக்குத் தலைக்கல்லாயிற்று..!
கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர்; அவர் கிருபை என்றுமுள்ளது. கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார், நான் பயப்படேன்; மனுஷன் எனக்கு என்னசெய்வான்? கர்த்தர் என் பெலனும், என் கீதமுமானவர்; அவர் எனக்கு இரட்சிப்புமானார். நீதிமான்களுடைய கூடாரங்களில் இரட்சிப்பின் கெம்பீரசத்தம் உண்டு; கர்த்தரின் வலதுகரம் பராக்கிரமஞ்செய்யும். கர்த்தரின் வலதுகரம் உயர்ந்திருக்கிறது; கர்த்தரின் வலதுகரம் பராக்கிரமஞ்செய்யும். வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லாயிற்று. அது கர்த்தராலே ஆயிற்று, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது. இது கர்த்தர் உண்டுபண்ணின நாள், இதிலே களிகூர்ந்து மகிழக்கடவோம். கர்த்தர் நம்மைப் பிரகாசிப்பிக்கிற தேவனாயிருக்கிறார்; பண்டிகைப்பலியைக் கொண்டுபோய் பலிபீடத்தின் கொம்புகளில் கயிறுகளால் கட்டுங்கள். சங்கீதம் 118:1,6,14-16,22-24,27
அன்பு நண்பரே!
மற்றோரு புதிய மாதம்… அதுவும் வெயிலின் அகோரம் நிறைந்த மாதம்…
தேவன் இம்மாதத்தில் தரும் வாக்குத்தத்தங்களை 118ம் சங்கீதத்திலிருந்து எடுத்துத் தந்துள்ளோம்…
வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லாயிற்று.
இந்த மூலைக் கல் வேறுயாருமல்ல. நம்முடைய ஆண்டவர் இயேசு கிறிஸ்துவே..
நண்பரே, உங்களுக்கும் மூலைக் கல் பணியை தேவன் வைத்துள்ளாரே..
தேவன் தங்களையும் பயன்படுத்த விரும்புகிறாரே..
எத்தனை நம்பிக்கையின் தேவன், நம் தேவன்..!
உயிர்த்தெழுந்த இயேசு, தம்மை உயிரோடிருக்கிறவர் என்று தம் சீஷரை திடப்படுத்திட..
நாற்பது நாட்கள் நேரம் எடுத்து பின்பே பரமேறினார்..
இன்று, அவர் விட்டுச் சென்ற பணியை நிறைவேற்ற, உங்களை அல்லவோ நம்பியிருக்கிறார்..
கர்த்தரின் வலது கரம் உயர்ந்திருக்கிறதே..
கர்த்தரின் வலது கரம் பராக்கிரம் செய்யுமே..
நீங்கள், உங்கள் குடும்பத்திலும் வேலை ஸ்தலத்திலும், நண்பர்கள் மத்தியிலும்..
பராக்கிரம திட்டங்களை நிறைவேற்ற வேண்டுமே..
ஒவ்வொரு நாளும், மகிழ்ந்து களிகூருங்கள்.
உங்கள் கூடாரங்களில் கெம்பீர சத்தம் உண்டாக்கட்டும்.
அனுதினமும் காலையிலும், மாலையிலும், உங்கள் குடும்ப ஜெபங்களை நடத்த மறந்துவிடாதிருங்கள்.
பிள்ளைகளோடு செலவழிக்கும் நேரமும் கூடட்டும்..
மற்றவர்களை அன்புடன் விசாரியுங்கள்..
தேவன் உங்களை பிரகாசிக்க செய்வார்..
உங்களுக்கு மூலைக்கல்லின் அழைப்பும், பணியும் உண்டே..!
ஆகாதவரென்று தள்ளப்பட்ட என் நாதர் இயேசுவே.. நீரே மூலைக்குத் தலைக்கல்.. உம்மாலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லையே.. என் தேவன் நீர் விட்டுச் சென்ற பணியை நிறைவேற்ற என்னை நான் அர்ப்பணிக்கிறேன்.. என்னை பிரகாசிக்கச் செய்யும்.. என்னை பயன்படுத்தும்.. உமது வலதுகரம் உயர்ந்திருக்கட்டும்.. மாதத்திற்கு ஒரு கனியையாவது எனக்குத் தாரும்.. என்னைக் கொண்டு பராக்கிரம திட்டங்களை நிறைவேற்றும்.. என்னையும் மூலைக்கல்லாக பயன்ப்படுத்தும்.. இப்பெரிய தேசத்திற்கு ஆசீர்வதமாக்கும்..! ஆமென்..! ஆமென்..!
Recommended Posts

General Secretary’s Weekly Mail
July 03, 2018

Blessed Sunday at Zion AG Church, Tirunelveli
September 12, 2024